திங்கள், 27 ஏப்ரல், 2015

தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு



-தினத்தந்தி,23.4.15

ஊரக வேலைத் திட்டம்: தினக் கூலி ரூ.183 ஆக உயர்வு



ஊரக வேலைத் திட்டம்: தினக் கூலி ரூ.183 ஆக உயர்வு

சென்னை, ஏப்.21_
 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங் கப்படும் தினக்கூலி தொகையை ரூ.167-இல் இருந்து ரூ.183-ஆக உயர்த்தி தமிழக அரசு உத் தரவிட்டுள்ளது. மத்திய அரசின் சுற்றறிக்கையைத் தொடர்ந்து, இதற்கான உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.
ஒராண்டில் நூறு நாள்களுக்குக் குறையாமல் வேலை வழங்கும் திட்டம் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்தத் திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள் ளது. இதற்கான சட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த வேலைத் திட்டத் தின் கீழ் தொழிலாளர் களுக்கு வழங்கப்படும் கூலியில்  மத்திய அரசு பெரும் பங்கு நிதி அளிக் கிறது. மேலும், ஒவ்வொரு நிதியாண்டிலும் கூலிக் கான தொகையும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகின் றன.
கடந்த 2014_2015 -ஆம் நிதியாண்டில் ஒரு நபருக்கான ஒரு நாள் கூலியானது ரூ.148-இல் இருந்து ரூ.167-ஆக உயர்த் தப்பட்டது. இந்தத் தொகையை நிகழ் நிதி யாண்டிலும் உயர்த்த மத்திய அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. அதன்படி, ஒரு நபருக்கான ஒரு நாள் கூலியை ரூ.167-இல் இருந்து ரூ.183-ஆக உயர்த்த லாம் எனத் தெரிவித்தது.
மத்திய அரசின் இந்த சுற் றறிக்கையைத் தொடர்ந்து, கூலியை உயர்த்துவது குறித்த பரிந்துரைகளை தமிழக அரசுக்கு, ஊரக வளர்ச்சி -ஊராட்சித் துறை இயக்குநர் அளித்தி ருந்தார். இந்தப் பரிந் துரைகளை ஏற்று கூலித் தொகையை உயர்த்துவதற் கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவை ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி பிறப்பித் தார். இந்த உத்தரவின் விவரம் வருமாறு:
நாளொன்றுக்கான உயர்த்தப்பட்ட கூலித் தொகையானது, ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடை முறைக்கு வருகிறது. கூலியை உயர்த்துவது குறித்து நிதித் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ள தாக உத்தரவில் குறிப் பிடப்பட்டுள்ளது. கூலித் தொகை உயர்த்தப்பட்ட நிலையிலும், இதற்காக மேற்கொள்ளப்படும் பணியின் அளவும் அதி கரிக்கப்பட்டுள்ளது.
குறிப் பாக, குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை தூர்வாரும் போது அதில் இருந்து எடுக்கப்படும் ஆழத்தின் அளவு உயர்த்தப்பட்டுள் ளது. செடிகள் நடுவது, பள்ளத்தை சமன்படுத்து வது, வனப் பரப்பை சுத்தம் செய்வது உள்பட பல்வேறு பணிகள் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத் தின் கீழ் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

-விடுதலை,21.4.15